2.1.9 தெரிந்துசெயல்வகை
2.1.9 Deliberation before action
461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
Weigh well output the loss and gain 461
And proper action ascertain.
462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
Nothing is hard for him who acts 462
With worthy counsels weighing facts.
463. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
The wise risk not their capital 463
In doubtful gains and lose their all.
464. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
They who scornful reproach fear 464
Commence no work not made clear.
465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
Who marches without plans and ways 465
His field is sure to foster foes.
466. செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
Doing unfit action ruins 466
Failing fit-act also ruins.
467. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
Think and dare a proper deed 467
Dare and think is bad in need.
468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
Toil without a plan ahead 468
Is doomed to fall though supported.
469. நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
Attune the deeds to habitude 469
Or ev'n good leads to evil feud.
470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
Do deeds above reproachfulness 470
The world refutes uncomely mess.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment