1.3.6. வாய்மை
1.3.6 Veracity
291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
If "What is truth"? the question be, 291
It is to speak out evil-free.
292. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
E'en falsehood may for truth suffice, 292
When good it brings removing vice.
293. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Let not a man knowingly lie; 293
Conscience will scorch and make him sigh.
294. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள்ளெல்லாம் உளன்.
He lives in loving hearts of all 294
Who serves the Truth serene in soul.
295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வா¡¢ன் தலை.
To speak the truth from heart sincere 295
Is more than giving and living austere.
296. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
Not to lie brings all the praise 296
All virtues from Truth arise.
297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
Lie not lie not. Naught else you need 297
All virtues are in Truth indeed.
298. புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்.
Water makes you pure outward 298
Truth renders you pure inward.
299. எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
All lights are not lights for the wise; 299
Truth light is light bright like Sun-light.
300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Of all the things we here have seen 300
Nothing surpasses Truth serene!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment