Translate

you are my

visitor

anantha sakthi kavasam dvd mp3

written and chanted by ashokha anantha chiththan.
chanted continuously and without any instruments
to get the maximum spiritual energy in the physical body.
Close your eyes. Listen the song. your brain will go to Alpha waves stage.
You will be in Alpha Mind Power. write your experience here.I will guide you more.

.

value of money


1005... கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல்.What is the good of crores they hoard To give and enjoy whose heart is hard...1005

Wednesday, November 4, 2009

2.2.5 வினைசெயல்வகை 2.2.5 Modes of Action

2.2.5 வினைசெயல்வகை
2.2.5 Modes of Action

671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
When counsel takes a resolve strong 671
Weak delay of action is wrong.

672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
Delay such acts as need delay 672
Delay not acts that need display.

673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
It's best to act when feasible 673
If not see what is possible.

674. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
Work or foe left unfinished 674
Flare up like fire unextinguished.

675. பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
Money and means, time, place and deed 675
Decide these five and then proceed.

676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
Weigh well the end, hindrance, profit 676
And then pursue a fitting act.

677. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
Know first the secret from experts 677
That is the way of fruitful acts.

678. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
Lure a tusker by a tusker 678
Achieve a deed by deed better.

679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
Than doing good to friends it is 679
More urgent to befriend the foes.

680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
Small statesmen fearing people's fear 680
Submit to foes superior.

No comments: